சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறவுள்ள 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டு சீன-மத்திய ஆசிய மானிட பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்வு ஜூன் 16ஆம் நாள் கசகஸ்தானின் அரசுத் தலைவர் மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குச் சீன ஊடக குழுமமும் மற்றும் கசகஸ்தான் அரசுத் தலைவர் தொலைக்காட்சி மற்றும் வானொலி கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்தன. கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவ் இந்நிகழ்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சீன-மத்திய ஆசிய ஊடகங்கள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவு இதில் வெளியிடப்பட்டது. சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து தயாரித்த சிறந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
மேலும், சீன-மத்திய ஆசிய ஊடகங்களின் செய்தி வெளியீட்டு கூட்டு நடவடிக்கை இனிதே நிறைவடைந்தது. சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் சுமார் 150 பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.