ஆர்ட்டெமிஸ்-II லான்ச் தேதி அறிவிப்பு; விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்  

Estimated read time 1 min read

சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ்-II விண்கலத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்கள் பயணிக்கும் முதல் மிஷன் இது என்பதால், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாசாவின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ராக்கெட், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ளது.
இந்திய நேரப்படி ஏப்ரல் 2, 2026 அதிகாலை 3:54 மணிக்கு பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த வரலாற்றுப் பயணத்தில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

You May Also Like

More From Author