கச்சா எண்ணெய், மின்சாரம், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) தீவிர ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளை முறியடித்து, நாட்டு மக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

You May Also Like

More From Author