போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா அரசின் தலைவர் குழுவின் நடப்புத் தலைவர் ஸ்விச்சனொவிக், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீன மக்களும், போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாவின் நண்பர்களாவர். உலகளவில் பலதரப்பு கட்டுக்கோப்பில், இரு தரப்பு ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன.
மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு வரும் அனைத்து திட்டப்பணிகளையும் போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா வரவேற்கிறது. இத்திட்டப்பணிகளின் செயலாக்கத்துடன் இருதரப்பு உறவு, தொடர்ந்து பலப்படுத்தப்படுகிறது.
இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரித்து வருவதுடன், இத்துறையில் மேலும் விரிவான எதிர்காலம் உண்டு என்று நம்புகிறேன்.
உலகின் நிதானம், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுக்கும் வகையில், சீனா முன்வைத்த பல்வேறு ஆலோசனைகளும், கருத்துகளும் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்தார்.