சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 24ஆம் நாளிரவு, அழைப்பின் பேரில், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தாருடன் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டார்.

அப்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் குறித்து தார் விளக்கமளித்தார். அதோடு, பாகிஸ்தானின் அமைதியை நனவாக்கும் இணக்க முயற்சிக்குச் சீனா எப்போதும் ஆதரவளித்து வருவதற்குப் பாகிஸ்தான் நன்றி தெரிவிப்பதாகவும் தார் என்றார்.

வாங்யீ கூறுகையில், ஈரானும் அமெரிக்காவும் குறிப்பாணையில் கையொப்பமிட்டது சர்வதேசச் சமூகத்தின் கூட்டு முயற்சிகளாகும். இதில் பாகிஸ்தான் முக்கியமான, தனிச்சிறப்பான பங்காற்றியுள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கமாக தொடர்புகொள்ள சீனா விரும்புகிறது என்றார்.

You May Also Like

More From Author