நிரவ் மோடியின் மனுவை நிராகரித்தது லண்டன் உயர் நீதிமன்றம்; சிபிஐ-க்கு கிடைத்த வெற்றி  

Estimated read time 1 min read

சுமார் ₹13,000 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, லண்டன் உயர் நீதிமன்றம் இன்று கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் உள்ள கிங்ஸ் பெஞ்ச் டிவிஷன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், நிரவ் மோடியின் மனுவில் குறிப்பிடும்படியான விசேஷ காரணங்கள் ஏதுமில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் இங்கிலாந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வலுவான வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தது.

You May Also Like

More From Author