Web team
இறைவன் தந்த பரிசு !
நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668
kavignareagalaivan@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது .
.
ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பார்த்து கேட்க்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன .சிறு வயதிலேயே ஆணாதிக்க சிந்தனையை கற்பித்து விடுவதால் அது இரத்தத்தில் கலந்த ஒன்றாகி விடுகின்றது. சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் .சக மனுசியின் மனசை மதிக்கும் உள்ளம் வேண்டும் .பெண்களை சமமாக மதிக்கும் உள்ளம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும் .அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் குரல் தந்துள்ளார். பாராட்டுக்கள் .
உன்னைச் சுற்றும் சாபங்கள் !
வீட்டுக்கு ஒரு பெண்டாட்டி
அவருக்கு மலடி என்று பெயர் பிள்ளை பெறாட்டி
தனக்கோர் வாரிசு வேண்டுமென்று ஆண்
அவன் மறுமணம் செய்து கொள்கிறான் .
தனக்கே குறை இருந்தால்
மனைவிககோர் மணம் செய்வானா ?
ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் .ஆசிரியர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் போல வைக்கும் கவிதை நன்று .அறிவொளி ஏற்றும் விளக்குகளான ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் .
நல்ல குருவுக்கு நன்றி !
திறமை நிறைந்த ஆசிரியர்களே
வறுமை நிறைந்த மாணவனுக்கும்
பெருமை வாய்க்கும் கல்வியை
சேவையாக கற்றுத் தாருங்கள் !
வாழ்வியல் கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள் .துன்பத்திற்கு துவளாமல் வாழ்வது எப்படி ? என்பதை உணர்த்துகின்றார் .
சுகங்கள் விரும்பாதீர் !
சுமக்கத் துணிந்தவனுக்கு
மலையும் துரும்பாகும் !
சுமக்க இயலாதவனுக்கு தன்
தேகமே சுமையாகும் !
சங்கடத்தையும்
சுகமாய் மாற்றிக் கொண்டால்
தொலைந்துவிடும் துன்பங்கள்
இதை மனதிடம் சொல்லி வையுங்கள் !
உழைப்பாளிகளின் சார்பில் உரக்க குரல் தந்து உள்ளார் .
உழைத்தவன் களைக்கும் முன்னே
அவன் ஊதியத்தைக் கொடுங்கள் !
அவனுக்கு சுகங்கள் இல்லாவிட்டாலும்
உயிராவது இருக்கட்டும் !
.
தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை நன்று .கூட்டுக் குடும்பம் இன்று சிந்திந்து தனித்தனி குடும்பமாகி விட்டன.
உயர்ந்த பின்னே மறவாதே !!
தேனீக்களின் பெருந்தன்மை
அதன் கூட்டை அழித்தாலும்
மீண்டும் கூடி கூடு கட்டுது !
நம் கூட்டுக் குடும்ப வாழ்வில்
சிறு சண்டை வந்தாலும்
மனம் விலகி மீண்டும் சேர்வதில்லை !
தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வரும் தொலைக்காட்சித்
தொடர்களுக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனர் .இவர்கள் மீட்டு எடுக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது . தொலைக்காட்சியால் வாசிக்கும் நல்ல பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது .நூல் ஆசிரியர் கனவிலும் வாசிக்கிறார் .
சொப்பனத்தில் ஒரு புத்தகம் !
உறங்க இமை மூடினேன்
சொப்பனத்தில் புத்தகம் படித்தேன் !
நூலகத்தின் நூலிலே
நல்ல கருத்துக்கள்.
சலித்தவன் சாதித்தது இல்லை
சாதிப்பவன் சலிப்பதும் இல்லை
இது நல்ல கருத்து
இந்த கருத்தை
என் இதயத்தில் ஏற்றி வைத்தேன் !
நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .இறைவன் தந்த பரிசு என்ற பெயரில் நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தந்த பரிசு நன்று
.