மேற்கு ஆசியப் போர் எதிரொலி: ஆசிய நாடுகளில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு  

Estimated read time 1 min read

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, பல ஆசிய நாடுகள் அவசர நிலையை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாட்டில் ‘தேசிய எரிசக்தி அவசரநிலை’ பிரகடனப்படுத்தியுள்ளார். அந்நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பு இன்னும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
அரசு அலுவலகங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, ஏசி வெப்பநிலை 24°C-க்குக் கீழ் குறைக்கத் தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்திற்குப் பிறகு விமானங்களை இயக்க எரிபொருள் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

You May Also Like

More From Author