தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.
நாடு முழுவதும் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளை தாலிபான்கள் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், ஆப்கானிஸ்தான் இப்போது “முழுமையான இணைய முடக்கத்தில்” இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இடையூறு காரணமாக காபூலில் உள்ள தங்கள் அலுவலகங்களுடனான தொடர்பை இழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்
