இஸ்ரோவிலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா  

Estimated read time 1 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிகளவில் (120 விஞ்ஞானிகள்) தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவின் மிக உயரிய விண்வெளித் திட்டங்களான ககன்யான் மனித விண்வெளி பயணம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு (VRS) விதிகளில் மத்திய விண்வெளித் துறை (DoS) கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இஸ்ரோவில் மொத்தம் 14,600 பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 120 பேரின் வெளியேற்றம் எண்ணிக்கை அளவில் சிறியதாகத் தெரிந்தாலும், இவர்கள் அனைவரும் இந்தியாவின் ‘கனவுத் திட்டங்களின்’ தூண்களாக இருந்தவர்கள் என்பதால் விண்வெளித் துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author