ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

Estimated read time 0 min read

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணிஎதிர்கொள்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், கொல்கத்தா அணிக்கு அஜின்கியா ரஹானேவும் கேப்டன்களாக களமிறங்குகின்றனர்.

இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

You May Also Like

More From Author