இந்தியாவுக்கு 4வது தங்கப் பதக்கம்!

Estimated read time 1 min read

கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி, 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது. இதைத் தொடர்ந்து, பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின.

பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால், ஒவ்வொரு நிமிடத்திலும் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 20-20 என்ற புள்ளி கணக்கில் சமநிலை அடைந்திருந்தது. இதனால், வெற்றி யாருக்கு என்பதில் இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே சென்றது. இறுதியில், ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கத்தை கைப்பற்றியது. இது இந்தியா ஜெயிக்கும் 4வது தங்கமாகும்.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு பைனலில் தோற்கடித்த ஈரானை வென்று இந்தியா பழி தீர்த்துக் கொண்டது. கடந்த 1990ம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசிய விளையாட்டு கபடியில் 2018ம் ஆண்டை தவிர்த்து, மற்ற அனைத்து சீசன்களிலும் இந்தியாவே தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில், 4 தங்கம்,11 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கத்துடன் பட்டியலில் 10வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

You May Also Like

More From Author