பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது உறுதி!  

Estimated read time 1 min read

பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டிற்குப் பார்ட்னர் நாடாக இந்தியாவும் அழைக்கப்பட்டுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே ஒரு முக்கிய இருதரப்பு சந்திப்பு நிகழ அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களால் இந்தியா – அமெரிக்கா உறவில் நிலவி வரும் சுணக்கத்தை இந்த நேருக்கு நேர் சந்திப்பு மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author