பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்

குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
பாஜகவில் சேருவதற்கு ஒருநாள் முன்பு வரைக்கும், விஜேந்தர், பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட் ஒன்றை ரீட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 அன்று கூட, லோக்சபா தேர்தலில் “மேட்ச் பிக்சிங்” மூலம் வெற்றி பெற்று அரசியலமைப்பை மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார் என்று குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தியின் ட்வீட்டை விஜேந்தர் சிங் ரீட்வீட் செய்திருந்தார்.
தற்போது திடீரென ஓவர் நைட்டில் பல்டி அடித்து கட்சி தாவியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

You May Also Like

More From Author