சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், ஏப்ரல் 1ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் என்ற சாக்குபோக்கில் ஜப்பான் தாக்குதல் ஆயுதங்களை நிலைநிறுத்துவது, கெய்ரோ அறிக்கை, போட்ஸ்டாம் அறிக்கை, ஜப்பானின் சரணடைதல் ஆவணம் உள்ளிட்ட சர்வதேச சட்டப்பூர்வ ஆவணங்களின் விதிகளை கடுமையாக மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
ஜப்பானின் புதிய ரக இராணுவவாதம் பிரதேச அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இது குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், ஜப்பான் தனது இராணுவ ஆக்கிரமிப்பு வரலாற்றை ஆழமாக மறு ஆய்வு செய்யவும், இராணுவ பாதுகாப்புத் துறையில் வாக்குறுதிகளைக் கடைப்பிடித்து, கவனமாக செயல்படுமாறு சீனா உறுதியுடன் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
