சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு

சீன தேசிய அந்நிய செலாவணி நிர்வாகப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டு ஜுலை திங்கள் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு தொகை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 430 கோடி அமெரிக்க டாலராகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட 1130 கோடி அமெரிக்க டாலர் அதிகம்.

2023ஆம் ஆண்டு ஜூலை திங்கள், முக்கிய பொருளாதார நாடுகளின் நாணய கொள்கை மற்றும் மதிப்பீடு, உலக ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை ஆகிய காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு சரிவடைந்தது. பணமாற்று விகிதம், சொத்து விலை மாற்றம் ஆகிய காரணங்களால், ஜுலை திங்களில் சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author