சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் பிப்ரவரி 27ஆம் நாள், 2024ஆம் ஆண்டு சீனச் சரக்குப் போக்குவரத்து தொழில் நுட்ப வளர்ச்சிக்கான அறிக்கையை வெளியிட்டது.
இவ்வறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது. குறைந்த உயரத்தில் வான்வழிப் பொருளாதாரம் மற்றும் சரக்குப் போக்குவரத்து தொழில் நுட்பம், ஏ.ஐ மற்றும் பெரிய மாடல் தொழில் நுட்பம் முதலியவை, 2024ஆம் ஆண்டில் சரக்குப் போக்குவரத்து துறையில் சூடாகக் காணப்பட்ட தொழில் நுட்பங்களாகும்.
தவிரவும், கடந்த 10 ஆண்டுகாலத்தில், சீனாவின் சமூக சரக்குப் போக்குவரத்தின் மொத்தத் தொகை, 2014ஆம் ஆண்டில் இருந்த 2 கோடியே 13 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானிலிருந்து, 2024ஆம் ஆண்டில் 3 கோடியே 60 இலட்சம் கோடி யுவானுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சீனா, உலகின் மிகப் பெரிய சரக்குப் போக்குவரத்துச் சந்தை எனும் தகுநிலையைப் பிடித்துள்ளது.