ஹுபெய் மாநிலத்தில் டிராகன் படகு உலக கோப்பை போட்டி

 

2023ஆம் ஆண்டு சர்வதேச படகு சம்மேளனத்தின் டிராகன் படகு உலக கோப்பை போட்டி, ஜுன் 22ஆம் நாள், சீனாவின் நாட்டுப்பற்று கவிஞர் ச்சு யுவானின் ஊரும், சீனாவின் டிராகன் படகு ஊருமான ஹுபெய் மாநிலத்தின் ஸிகுய் மாவட்டத்தில் துவங்கியது. 2 முக்கிய போட்டிகளையும் 18 பிரிவுகளையும் கொண்டுள்ள இப்போட்டியில், சீனா, இந்தியா, ஈரான், மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
பண்பாடு மற்றும் விளையாட்டின் பரவலாக்கத்துடன், டிராகன் படகு திருவிழாவின் போது நடைபெறும் டிராகன் படகு போட்டியானது, சர்வதேசத் தர நிர்ணயம் மற்றும் சீரான ஒழுங்குமுறை கொண்ட நவீன போட்டியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author