செங்டு 12ஆவது உலக விளையாட்டுப் போட்டிக்கான சீனப் பிரதிநிதிக் குழு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. இந்தக் குழுவில் 321 விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட மொத்தமாக 489பேர் இடம் பெற்றுள்ளனர். 28 விளையாட்டுகளில் 152 போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், சீனா முதன்முறையாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்களை இப்போட்டியில் பங்கேற்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12ஆவது உலக விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 7முதல் 17ஆம் நாள் வரை செங்டு நகரில் நடைபெறவுள்ளது. சீனப் பெருநிலப்பகுதி இப்போட்டியை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.