LPG சிலிண்டர் முன்பதிவுக்கு ரூ.200 கேஷ்பேக்: அசத்தல் அறிவிப்பு…!!

Estimated read time 1 min read

முன்னணி டிஜிட்டல் தளமான பேடிஎம் (Paytm) சமீபகாலமாக தனது பயனர் தளத்தை அதிகரிக்க, கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள், UPI LITE மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட UPI ஐடிகள் போன்ற பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், பேடிஎம்(Paytm) தனது பயனர்களை அதிகரிக்க தற்போது மாபெரும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது பேடிஎம் செயலி மூலம் செய்தால் உங்களுக்கு ரூ.200 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

Paytm செயலியின் இந்த சலுகை புதிய பயனர்களை ஈர்த்து வருகிறது. அந்த சலுகை பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இன்டேன் கேஸ் போன்ற எந்த நிறுவனத்தின் சிலிண்டரையும் Paytm செயலி மூலம் முன்பதிவு செய்யும் போது நீங்கள் இந்த கேஷ்பேக் சலுகையை பெற முடியும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், Paytm அறிவித்துள்ள இந்த கேஷ்பேக் திட்டம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அதன்படி பயனர்கள் இந்தச் சலுகையைப் பெறுவது மிகவும் எளிது. முதலில், முதலில் உங்கள் மொபைலில் Paytm செயலியை திறந்து recharge and bills என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, book gas cylinder என்பதை தேர்வு செய்து, உங்கள் பெயரை மற்றும் கேஸ் சிலிண்டர் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், பணம் செலுத்துவதற்கு முன், சலுகைப் பகுதியில் கிடைக்கும் ப்ரோமோ குறியீட்டைப் (Promo Codes) பயன்படுத்துவதன் மூலம், கேஸ் முன்பதிவில் நீங்கள் ரூ.200 கேஷ்பேக் வாய்ப்பைப் பெறலாம்.

Paytmன் இந்த ரூ.200 கேஷ்பேக் நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்திற்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.

ஏனெனில் தற்போது சென்னையில் ரூ.928.50க்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பேடிஎம் கேஸ்பேக் மூலம் 200 ரூபாயை மிச்சப்படுத்தலாம்.

ஆனால் இந்த ரூ.200 கேஷ்பேக் பெறுவதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது, ‘உங்களுக்கான சலுகைகள்’ (Offers for You) பிரிவில் CYLWIN என்ற ப்ரோமோ குறியீட்டை உள்ளிட்டால் மட்டுமே உங்களுக்கான சலுகை என்னவென்று தெரியவரும்.

ஒவ்வொரு 2000-வது பயனரும் இந்த ரூ.200 கேஷ்பேக்கை வெல்லலாம் என்றாலும் இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால் அந்த சிறப்பு சலுகை அனைவருக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு சலுகையை பெறலாம். அதேபோல் அந்த சலுகையை ஒவ்வொரு பயனரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே, கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி ரூ.200 கேஷ்பேக்கை உங்கள் கணக்கில் நேரடியாகப் பெற வேண்டுமென்றால் உங்கள் வங்கிக் கணக்கை Paytm உடன் இணைத்திருக்க வேண்டியது கட்டாயம். Paytm உடன் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் இந்த கேஷ்பேக்கைப் பெற முடியாது. கேஸ் முன்பதிவு செய்வதற்கு முன், செயலியில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாகச் சரிபார்த்து கொள்வது மிகவும் அவசியம்.

Please follow and like us:

You May Also Like

More From Author