பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
புருனேவுடன் தூதரக உறவுகளைத் தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதற்கான விழாவில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி, புருனேவுக்கு இருதரப்பு பயணமாக செல்லும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை பெறுவார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னர் மன்மோகன் சிங் சென்றிருந்தாலும், அவர் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மட்டுமே அங்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.