இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த பார்ம் 16 Form 16) முறைக்கு விடை கொடுத்துவிட்டு, 2026-27 நிதியாண்டு முதல் பார்ம் 130 (Form 130) என்ற புதிய படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் மற்றும் 2026 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின்படி இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிர்வாக மாற்றத்தின் முக்கிய நோக்கம், டிஜிட்டல் முறையில் வரி அறிக்கைகளைத் துல்லியமாகப் பராமரிப்பதும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அரசின் டிஜிட்டல் பதிவுகளுடன் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்வதும் ஆகும்.
இனி பார்ம் 16 கிடையாது! சம்பளதாரர்களுக்குப் புதிய ‘பார்ம் 130’
