ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டம் முடிந்தவுடன் தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவின் கொடி குறியீடு 2002, மூவர்ணக் கொடியை ஒருவர் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டுதல்களைத் தருகிறது.
தேசியக் கொடியை இறக்கிய பிறகு மடித்து மரியாதையுடன் வைக்க வேண்டும்.
கொடியை கிடைமட்டமாக வைத்து, காவி நிற பட்டை மேலேயும், வெள்ளை நிற பட்டை நடுவிலும், பச்சை நிற பட்டை கீழேயும் இருக்கும்படி மடிக்க வேண்டும்.
பின்னர், காவி மற்றும் பச்சை நிற பட்டைகளின் பகுதிகளுடன் அசோக சக்கரம் மட்டுமே தெரியும் வகையில் வெள்ளை நிற பட்டையை மடிக்க வேண்டும்.