ஈரானிடம் சாதித்த இந்தியா; ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் சமையல் எரிவாயு கப்பல்கள்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
‘தி ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,”ஈரானுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நல்ல பலனைத் தரத் தொடங்கியுள்ளன. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தையும் ஒருங்கிணைப்பும் மட்டுமே சிறந்த வழி என்பதை இது நிரூபிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் இந்தியா கப்பல்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது அதன் ராஜதந்திர கொள்கைகளுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author