தமிழ்நாடு தேர்தல் 2026: ஏப்10 முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்  

Estimated read time 1 min read

தமிழ்நாடு 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண்குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) விநியோகிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பணிகளை விரைந்து முடிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) விநியோகிக்கும் பணி ஏப்ரல் 10, 2026. தொடங்கி ஏப்ரல் 17, 2026. முடிவடையும்.
அந்தந்தப் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) உங்கள் வீடுகளுக்கே நேரடியாக வந்து இந்தச் சீட்டுகளை வழங்குவார்கள்.

You May Also Like

More From Author