மார்ச் திங்களில் சீனாவின் மொத்த பொருட்களின் விலை குறியீட்டை சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம் இன்று வெளியிட்டது. இந்த குறியீட்டின் படி, வசந்த விழா முடிந்த பிறகு, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நிலைமை நிதானமாக இருக்கின்றது. சந்தையின் தேவை சீராக அதிகரித்தது. மொத்த பொருட்களின் சந்தை விரிவடைந்து வருகின்றது. சீராக வளரும் போக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் திங்களில் சீன மொத்த பொருட்களின் விலை குறியீடு 129.9 புள்ளியாகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட 4 விழுக்காடு அதிகம். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.5 விழுக்காடு அதிகம். மத்திய கிழக்கு நிலைமை தொடர்ந்து தீவிரமாகியதோடு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவாக அதிகரித்தது உள்ளிட்ட வெளிப்புற காரணங்களால், உள்நாட்டு எரியாற்றல் மற்றும் வேதியியல் உற்பத்தி பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்தது. கடந்த மாதத்தில் இருந்ததை விட, இவை முறையே 16.5 மற்றும் 21.8 விழுக்காடு அதிகரித்தன. சர்வதேச வேதியியல் உரம் விலை அதிகரித்தது மற்றும் உயிரியல் எரி பொருட்களுக்கான தேவை அதிகரித்ததோடு உள்நாட்டு வேளாண் பொருட்களின் விலை கடந்த மாதத்தில் இருந்ததை விட 2.8 விழுக்காடு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
