தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போச்சுன்னு எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டுட்டு இருக்கிற நேரத்துல, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடியான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த கேள்விக்கு பதில் சொன்ன டிஜிபி, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த வருடம் தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக ஜனவரி முதல் நவம்பர் 15 வரை சராசரியா 1421 கொலை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆனால் 2026-ல் இதுவரை 1306 கொலைகள் தான் பதிவாகி இருக்கிறது என கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் இதோ:
கொலை வழக்குகள் – கொள்ளைக்காக கொலை செய்யப்பட்டவை தவிர்த்து (ஜனவரி முதல் நவம்பர் 15 வரை)
– *2022: 1,484 வழக்குகள்
– *2023: 1,469 வழக்குகள்
– *2024: 1,383 வழக்குகள்
– *2025: 1,346 வழக்குகள்
– *2026: 1,306 வழக்குகள் (நவம்பர் 15 வரை)
அதாவது, கடந்த வருஷத்தை விட இந்த வருஷம் 40 வழக்குகள் குறைந்துவிட்டது. கடந்த 4 வருஷ சராசரியை விட 115 வழக்குகள் குறைந்துவிட்டது. இது தான் 5 வருஷத்துலயே மிகக் குறைவான எண்ணிக்கை. அது மட்டும் இல்லை, கொலை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறதுலயும் போலீஸ் அதிரடி காட்டி இருக்கிறதா டிஜிபி சொல்லியிருக்கிறார்.
2026-ல் அக்டோபர் வரை:
– சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்: 3,229 பேர்
– கைது செய்யப்பட்டவர்கள்: 3,077 பேர்
– கைது சதவீதம்: 95%
