சென்னையில் இன்று நடைபெறவிருந்த விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து..!

Estimated read time 1 min read

தேர்தலை முதன் முறையாக சந்திக்க உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார்.

அதன்படி பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பிரச்சாரத்தை விஜய் முன்னெடுத்தார். அப்போது ,மக்கள் கூட்டம் அதிகரித்து கட்டுப்பாட்டை மீறியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என எண்ணிய விஜய் தனது பிரச்சாரத்தை முழுமையாக தொடராமல் குறுகிய நேரத்திலேயே முடித்து விட்டு சென்றார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி விஜய் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டது மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விஜய் சார்பில் வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், டி நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டனர்.

நான்கு இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தவெக மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரை செய்ய மதியம் 12 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிட்கோ நகரில் விஜய் பரப்புரை செய்து கொள்ள ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.காவல்துறை விதித்திருந்த நேர கட்டுப்பாடுகளை செயல்படுத்த முடியாது என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.குறைவான நேரம் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதி வழங்கியதால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

வில்லிவாக்கம் தொகுதியில் மதியம் 11 மணி முதல் 1 மணி வரையிலும் தி நகர் தொகுதியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அக்கட்சியின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் வில்லிவாக்கம் தொகுதியில் 12 மணி முதல் ஒரு மணி வரையும் தி.நகர் தொகுதியில் 2 மணி முதல் 3 மணி வரை என தல ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியிருப்பதால் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author