த.வெ.க 200 தொகுதிகளில் வெற்றி பெறும் – செங்கோட்டையன்..!

Estimated read time 0 min read

கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் தியாகம், இன்னொரு பக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் ஆகும். மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய், நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும், இந்தியாவே வியக்கும்.

தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழும் காலமாக அமையும், அதற்காகத்தான் மனிதநேயத்தோடு இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டும் அல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார் தலைவர் விஜய்.

இதற்கெல்லாம் வரும் 4 ஆம் தேதி பதில் சொல்லும். தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எதற்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது 4 ஆம் தேதி பிரதிபலிக்கும். வெற்றிக்கு பிறகு விஜய் ஆட்சியை பிடிப்பார். நாங்கள் 150 முதல் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம்.

கர்வத்தை கொண்டுள்ள சாம்ராஜ்யம் அழித்து போகும், அதை யாராலும் தடுக்க முடியாது. எங்களிடத்தில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். தலைவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இது உலக வரலாற்றில் மூன்று தலைவர்களுக்கு பிறகு தற்போது காணப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author