2028 முதல் டெல்லியில் எலக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்  

Estimated read time 1 min read

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் இவி பிரிவால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பெட்ரோல் வாகனங்களுக்குக் கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான அம்சமாக, ஏப்ரல் 1, 2028 முதல் டெல்லியில் புதிய பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

You May Also Like

More From Author