பீகாரில் கோரம்: பேருந்து – பிக்கப் வாகனம் மோதி 13 பேர் பலி  

Estimated read time 0 min read

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது.
தேசிய நெடுஞ்சாலை 31ல் அதிவேகமாக வந்த பேருந்தும், பயணிகளை ஏற்றி வந்த பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவிழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மீது பேருந்து மோதி உயிரிழப்பு ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author