எதிர்பார்க்கத்தக்க சீனாவின் புதிய தாராள வர்த்தக மண்டலம்

 

சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக விரிவாகியுள்ளது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்க ஆண்டில் சீனாவில் புதிய தாராள வர்த்தக மண்டலத்தின் திறப்பு, தரை-கடல் இடையேயும் கிழக்கு-மேற்கு பகுதிகளின் இடையேயும் ஒன்றுடன் ஒன்று இணையும் திறப்பு கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. இது உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, கொந்தளிப்பாக மாறிவரும் உலகிற்கு அதிக உறுதித்தன்மையையும் ஊட்டி, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை சீனா விரிவாக்கும் மன உறுதியையும் வெளிக்காட்டியுள்ளது.

தனித்துவமான நில அமைவுடைய உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் புதிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் அமைந்துள்ளது. வரலாற்றில் புல்வெளி பட்டுப்பாதை மற்றும் தேயிலை பாதையில் மையமாக திகழ்ந்த உள்மங்கோலியா, தற்போது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்திலும், சீனா-மங்கோலியா-ரஷியா பொருளாதாரப் பாதையிலும் முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது. நீண்ட எல்லைக் கோடு மற்றும் அதிக நுழைவாயில்களுடன், வடக்கு நோக்கிய திறப்புக்கு இப்பிரதேசம் இயற்கையான நலன்களைக் கொண்டுள்ளது.

இம்மண்டலத்துக்கான ஒட்டுமொத்த திட்டத்தின்படி, உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம், சீனாவிலுள்ள எல்லைப் பகுதியின் வளர்ச்சி மற்றும் திறப்புக்கான உத்திநோக்கு முன்னணியாக உருவாக்கப்படும். இதனிடையே உள்ளூர் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் உருவாக்கம், சீனா சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேம்படுத்துவதற்கான புதிய நடைமுறையாகும். வர்த்தக முதலீட்டில் மிக உயர்ந்த தாராளமயமாக்க அளவு மற்றும் வசதிமயமாக்க அளவுடன், சீனாவின் தாராள வர்த்தக சோதனை மண்டலங்கள் சர்வதேச சமூகத்துக்கு பெருவாரியான வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன. புதிதாக திறக்கப்பட்ட உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலத்தை எடுத்துக்காட்டாகக் கூறினால், செழிப்பான எரியாற்றல் மற்றும் விவசாய வளங்களையும், பசுமையான கணிமை திறன், டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற புதிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ள இம்மண்டலம், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக சந்தை வாய்ப்புகளையும் தரமிக்க வணிக சூழ்நிலையையும் வழங்கும்.

குறிப்பிட்ட சில நாடுகள் ஒருசார்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை செயல்படுத்தும் போது, தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி அமைப்புமுறை சார் திறப்பை ஆழப்படுத்தும் சீனா, பல்வேறு தரப்புகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. உலகிற்கு வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளும் சீனாவின் முயற்சியை இது வெளிப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author