2026ஆம் ஆண்டு உலக இணைய மாநாட்டின் ஆசிய-பசிபிக் உச்சிமாநாடு ஏப்ரல் 13ஆம் நாள் முற்பகல் ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் துவங்கியது.
2 நாட்கள் நீடிக்கும் இந்த உச்சிமாநாட்டின்போது, அறிவுசார் முகவர்களின் புத்தாக்கம் மற்றும் பயன்பாடு, எண்ணியல் நாணயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, மக்களின் வாழ்வாதாரத்துக்கான நுண்ணறிவின் பயன், ஆரோக்கிய துறையில் எண்ணியல் நுண்ணறிவின் பயன்பாடு, நூல்களின் எண்ணியல் மற்றும் நுண்ணறிவு மயமாக்கல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 6 கிளை கருத்தரங்குகள் நடத்தப்படும். உலகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசியல் மற்றும் வணிகத் துறை தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் ஒன்றுக்கூடி, இணையத் துறையின் அதிநவீன துறைகள் மற்றும் பிரதேச எண்ணியல் ஒத்துழைப்பு குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி கொண்டு, ஆசிய-பசிபிக் வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை வழங்கவுள்ளனர்.
உலக இணைய மாநாடு நடப்பு உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் இவ்வுச்சி மாநாட்டை ஏற்று நடத்துகிறது.
