சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு பாகிஸ்தான் விண்வெளி வீரர் ஒருவரை அனுப்பும் விதம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிப்ரவரி 28ஆம் நாள் இஸ்லாமாபாதில் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையொப்பமானது.
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பணியகமுமம், பாகிஸ்தான் விண்வெளி மற்றும் உயர் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையமும் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டன.
இதன்படி, பாகிஸ்தான் விண்வெளி வீரர்களுக்கு சீனா பயிற்சியளிக்கும். அவர்களில் ஒருவர், சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதலாவது வெளிநாட்டு வீரராகத் திகழ்வார்.
இத்தேர்வு செயல்முறை ஓராண்டு நீடிக்கும். பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள் சீனாவில் விரிவான மற்றும் அமைப்புமுறை ரீதியான பயிற்சி முகாமில் கலந்து கொள்வார். அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் சீன விண்வெளி வீரர்களுடன் இணைந்து, விண்வெளி நிலையத்தில் குறுகிய கால கடமையில் ஈடுபடுவார்கள்.
பாகிஸ்தான் விண்வெளி மற்றும் உயர் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையத்தின் தலைவர் கூறுகையில், இது பாகிஸ்தான் விண்வெளித் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாகும். சீனாவின் மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் திட்டம் முன்னணியில் உள்ளது என்று கருதுகிறேன். இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கை பாகிஸ்தானைப் பொறுத்த வரை மிகவும் முக்கியம் என்றார்.