சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 13ஆம் நாளில், பாகிஸ்தான துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான டாருடன் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டார்.
ஈரான்-அமெரிக்க தொடர்புக்கான பாகிஸ்தானின் இணக்க முயற்சி குறித்து டார் விளக்கமளித்தார். இதற்கான சீனாவின் நல்லிணக்கமான முயற்சிக்கும் அவர் நன்றி தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து நெருக்கமாக தொடர்புகொண்டு ஒத்துழைத்து, பிராந்திய அமைதியை நனவாக்குவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று டார் வலியுறுத்தினார்.
சீனாவின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை வாங்யீ மீண்டும் வலியுறுத்தினார். இயன்ற அளவில் மோதல் மீண்டும் தொடராமல் தவிர்க்க வேண்டும் என்பது தற்போதைய அவசர கடமையாகும். போர் நிறுத்தத்தை மாபெரும் முயற்சியுடன் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
