ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூரோ ஐசியு வார்டின் சேமிப்பு அறையில் இரவு சுமார் 11:20 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரத்த மாதிரி குழாய்கள் வைக்கப்பட்டிருந்த அந்தச் சேமிப்பு அறையில், short circuit காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், மருத்துவமனையில் 210 நோயாளிகள் இருந்தனர்.
நான்கு ஐசியுக்களிலும் தலா 40 நோயாளிகள் இருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே ICU ஊழியர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி
