Post Views: 39
சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது மற்றும் சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய தீர்மானம் குறித்த கருத்துக்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மே 20ஆம் நாள் பெய்ஜிங்கில் கட்சி சாராத பிரமுகர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தீர்மானம் குறித்து பல்வேறு ஜனநாயகக் கட்சிகளின் பிரமுகர்கள், அனைத்துச் சீனத் தொழில் மற்றும் வணிகச் சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
இக்கலந்தாய்வில் உரை நிகழ்த்திய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கூட்டம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது ஆகியவற்றை முக்கியமாகப் பரவல் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். புதிய பயணத்தில் கட்சி மற்றும் நாடு எதிர்கொள்ளும் புதிய நிலைமை மற்றும் புதிய கடமைகளாக இவை கருதப்படுகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, உரிய திட்டமிடல்களுடன் சீர்திருத்தங்களை மேலும் பன்முகங்களிலும் ஆழப்படுத்திப் பரவல் செய்வது, அடுத்த நூற்றாண்டுக்கான இலக்கை அடைவதற்குரிய வலுவான இயக்கு ஆற்றல் மற்றும் அமைப்பு முறை உத்தரவாதத்தை வழங்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
Please follow and like us: