சீரான சீன-அமெரிக்க உறவு உலக வளர்ச்சிக்கு உறுதியை வழங்கும்:நிபுணர்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், விழாயக்கிழமை அவர் விமான நிலையத்தில் நிகழ்த்திய எழுத்துமூல உரை மக்களுக்கு ஊக்கம் தந்துள்ளது என்றும் சர்வதேசப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அறிஞரும் வென்சோ-கீன் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியருமான மாஜ்லீசன் கூறுகையில், அமெரிக்காவும் சீனாவும் ஒரே திசை நோக்கி முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க வணிகர் மென்தர்ஸ் கூறுகையில், அரை ஆண்டில் அமெரிக்க மற்றும் சீன தலைவர்கள் பரஸ்பர பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார். சீனாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிதான உறவை உருவாக்க வேண்டும் என்ற ஷி ச்சின்பிங்கின் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கின்றேன் என்றார்.

You May Also Like

More From Author