ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

Estimated read time 1 min read

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி குண்டம் திருவிழா தொடங்கி, தினந்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மனின் வீதியுலா நடைபெற்றது.

பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு அம்மன் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து பண்ணாரி அம்மனை வழிபட்டனர்.

You May Also Like

More From Author