சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான டோ லாமின் மனைவி கோ ஃபுவாங் லி ஆகியோர், 15ஆம் நாள் முற்பகல் சீன தேசிய நாடக கலை மையத்தைப் பார்வையிட்டனர்.
பெங் லியுவான் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையேயும் மக்களுக்கிடையேயும் நட்புறவுகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் கலாசார நிறுவனங்களும் கலைஞர்களும் பல்வேறு வழிகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். பெங் லியுவானின் அன்பான மற்றும் அக்கறையான ஏற்பாடுகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததோடு, கலாசார வளர்ச்சியிலும் கலைப் புத்தாக்கத்திலும் சீனாவின் சாதனைகளை கோ புவோங் லி பெரிதும் பாராட்டினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் கலைத் துறைகளில் பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும், வியட்நாம்-சீனா நட்புறவை மேம்படுத்தவும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
