சீன நிதித் துறை அமைச்சகம் 26ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு முதல் 7 மாதங்களில், சீனாவின் பொது வரவுச் செலவுத் திட்டத்தில் வருவாய் 13 இலட்சத்து 56 ஆயிரத்து 630 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 2.6 விழுக்காடு குறைந்தது.
அதேசமயம், தேசியளவிலான பொது செலவு 15 இலட்சத்து 54 ஆயிரத்து 630 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 2.5 விழுக்காடு அதிகரித்தது. முக்கியத் துறைகளின் செலவு சீராக இருந்துள்ளது.
இதில் சமூக காப்புறுதி மற்றும் வேலை வாய்ப்பு செலவு 4.3 விழுக்காடு அதிகரித்தது. வேளாண், வனம் மற்றும் நீர்மூலவள துறையின் செலவு 8.2 விழுக்காடு அதிகரித்தது. நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையில் குடியிருப்புப் பகுதியின் செலவு 7.2 விழுக்காடு அதிகரித்தது.