சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியில் சுமார் 60 ஆஸ்திரேலிய நிறுவனங்கள் 360 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய காட்சியிடங்களை நடத்தி பங்கேற்றன. கௌரவ விருந்தினரான ஆஸ்திரேலியா இப்பொருட்காட்சியில் பங்கேற்றது முதல் இதுவரை மிக அளவிலான பிரதிநிதிக் குழுக்களை உருவாக்கியுள்ளது. மேலும், இவ்வாண்டு சீன-ஆஸ்திரேலிய தாராள வர்த்தக உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்புக்குமிடையே உள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான தலைசிறந்த மேடை இப்பொருட்காட்சியாகுமென ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு கமிட்டியின் துணை தலைமை செயல் அதிகாரி டேனியல் போயர் கூறுகையில், சேவைத் தொழில் குறிப்பாக நிதிச் சேவை, கட்டடக்கலை, தொழில்நுட்ப சேவை முதலிய துறைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆஸ்திரேலிய-சீன உறவின் வளர்ச்சிக்கு இன்றியமையாத உந்து ஆற்றலாக இவை விளங்குகின்றன என்று தெரிவித்தார்.
