சீன அரசுத் தலைவர் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 15ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,

சிக்கலான சர்வதேச நிலைமையை எதிர்நோக்கும் போது, சீன-ரஷிய உறவின் நிதானம் மற்றும் உறுதி தன்மை, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வலிமையான நெடுநோக்கு ஒத்துழைப்பை இரு தரப்பும் மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் நியாயமான நலன்களைப் பேணிக்காத்து, தெற்குலக நாடுகளுக்கிடையில் ஒற்றுமையைப் பாதுகாத்து, பெரிய நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர நாடுகளின் பொறுப்பையும் கடமைகளையும் ஏற்று செயல்பட வேண்டும் என்றார்.

லாவ்ரோவ் கூறுகையில்,

இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலில், ரஷிய-சீன ஒத்துழைப்புகளின் முன்னேற்றப் போக்கு சீராக விளங்குகிறது. சீனாவுடன் இணைந்து, இரு தரப்புறவைத் தொடர்ந்து வளர்த்து, உலகின் அமைதி மற்றும் நிதானத்திற்கு மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.

 

You May Also Like

More From Author