சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடியத் தலைமையமைச்சர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மீட்டெடுத்து மீண்டும் முன்னேற்றுவிப்பது குறித்து இரு தரப்பினரும் கடந்த ஆக்டோபரில் தென் கொரியாவில் ஆழமாக விவாதித்த நிலையில் இரு நாட்டுறவில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் பெறப்பட்டுள்ளன என்றார். மேலும், சீன-கனேடிய உறவின் சீரான, நிதானமான வளர்ச்சி, இரு நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல், உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமைக்கும் துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீன-கனேடிய உறவு குறித்து ஷி ச்சின்பிங் 4 முன்மொழிவுகளை வழங்கினார்.
சந்திப்பின் போது கார்னி கூறுகையில், இரு நாடுகளின் பொருளாதாரம் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்வதில் அதிக வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளதோடு, பரந்தளவில் பொது நலன்களையும் கொண்டுள்ளன என்றார். மேலும், சீனாவுடன் சேர்ந்து, வலிமையான தொடர்ச்சியான ரீதியில் புதிய ரக நெடுநோக்குக் கூட்டாளியுறவை உருவாக்க கனடா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சீன மற்றும் கனேடியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
