மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடுஅளிக்கும் மசோதா வரவேற்கத்தக்கது எனவும் மத்திய அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அரசியலமைப்புத் திருத்தம் மூலம், சட்டமன்றங்களில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க முடியும் எனவும் இதனால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அவர்குறிப்பிட்டார்.
