மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்  

Estimated read time 0 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்படும் இந்த உயர்வு, இந்த முறை சில காலதாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இந்தத் தாமதம் குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author