காங்கோ குடியரசின் தலைவர் சாஸ்ஸூவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் துணை தலைவருமான ஷௌஹூங் 16ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான பிராசவிலில் அரசுத் தலைவர் சாஸ்ஸூவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். 17ஆம் நாள் சாஸ்ஸூ அரசுத் தலைவர் மாளிகையிலில் ஷௌஹூங்கைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஹௌஹூங் கூறுகையில், சீன- காங்கோ நட்புறவுக்கு நீண்டகால வரலாறு உடையது என்றும், உறுதியானது என்றும் கூறினார். இரு தரப்புறவின் வளர்ச்சிக்குச் சீனா பெரும் முக்கியத்தும் அளித்து வருகிறது. காங்கோவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டு கருத்துக்களை செவ்வனே செயல்படுத்தி ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டு வெற்றி தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கச் சீனா விரும்புகிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் இணைத் தலைவர் நாடுகள் தங்கள் பொறுப்பை நன்று நடைமுறைப்படுத்தி சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சியையும் தெற்குலகின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பையும் கூட்டாக வழிநடத்த விரும்புகிறது என்று தெரிவித்தார்.
