ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Estimated read time 0 min read

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் “சங் பயணத்தின் 100 ஆண்டுகள் மற்றும் புதிய எல்லைகள்” என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தனிமனித மற்றும் சமூக நலனுக்கு இடையே சமநிலை அவசியம் என்றும், இந்த முரண்பாடுகளின் விளைவாகவே முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்கள் உருவாகின என்றும் தெரிவித்தார்.

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்தவர்களும் பாரம்பரியம், முன்னோர் மரபு மற்றும் கலாசார அடையாளத்தின் அடிப்படையில் ஒரே நாகரிக மரபின் அங்கமாக உள்ளனர் என்றும் மோகன் பாகவத் கூறினார். உலகம் தற்போது புதிய வழிகாட்டுதலுக்காக இந்தியாவை நோக்கி பார்க்கிறது என கூறிய மோகன் பாகவத், வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்லும் பாதையை மனிதகுலம் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author