சர்வதேச சட்டத்தை மீறிய ஜப்பான் ராணுவ வெறி

1946ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் டோக்கியோவில், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீதான விசாரணை நடைபெற்றது. நியூரம்பெர்க் விசாரணைக்கு பிறகு, மனித குலத்தின் வரலாற்றில் இன்னொரு பெரியளவான பல நாடுகள் கலந்துகொண்ட ராணுவ விசாரணை இதுவே ஆகும்.

நிறைய சான்றுகள் மற்றும் கடுமையான சட்டக் கோட்பாடுகளின் மூலம், ஜப்பான் ராணுவ வெறி, ஆக்கிரமிப்பு போரை நடத்தி, சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியது என்று டோக்கியோ விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. நியாயமான தீர்ப்பு அவமதிக்கப்படக் கூடாது. வரலாற்று உண்மையைப் பின்பற்ற வேண்டும் என்று இது வெளிகாட்டியது.

கைரோ அறிக்கை மற்றும் போஸ்தான் அறிக்கையின் படி டோக்கியோ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போரில் வெற்றி பெற்ற நாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பங்களை இது வெளிகாட்டியது. 2ஆவது உலக போர் வெற்றி பெற்ற முடிவை இது பேணிக்காத்தது. 2ஆவது உலக போருக்கு பிந்தைய சர்வதேச ஒழுங்கையும் சர்வதேச நியாயத்தையும் பேணிக்காப்பதற்காக சட்டம் மற்றும் அரசியல் அடிப்படையை இது உருவாக்கியது.

You May Also Like

More From Author