பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அன்புமணியின் இந்தச் செயல்கள், தான் தோன்றித்தனமாகவும், அரசியல்வாதியாக இருப்பதற்கே தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளதாகவும் ராமதாஸ் கூறினார்.
மேலும், அன்புமணி கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகவும், கட்சியை அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
